அனுமதியின்றிகட்சி கொடி கம்பம் ஊன்றிய 4 பேர் மீது வழக்கு

போடி அருக அனுமதியின்றி கட்சி கம்பம் ஊன்றிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அனுமதியின்றிகட்சி கொடி கம்பம் ஊன்றிய 4 பேர் மீது வழக்கு
Published on

போடி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை போடி தாலுகா போலீஸ்காரர் முருகானந்தம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நாகலாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 4 பேர் வந்தனர். அவர்கள் அனுமதியின்றி தமிழ் புலிகள் கட்சி கொடி கம்பத்தை ஊன்ற முயன்றனர். இதை முருகானந்தம் தடுத்தார்.

ஆனால் அவர்கள் அவரது பேச்சை கேட்காமல் பணி செய்ய விடாமல் தடுத்து கொடி கம்பத்தை ஊன்றினர். இதுகுறித்து போடி தாலுகா போலீசில் முருகானந்தம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன், வீரன், அனிஸ், மணி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com