

வேடசந்தூர்,
கரூர் மாவட்டம் தோகை மலை அருகே உள்ள தெலுங்குப்பட்டியைச் சேர்ந்த அரியதம்பி என்பவரின் மனைவி சுமதி(38). இவருக்கு தோகைமலையைச் சேர்ந்த கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த கள்ளக்காதல் ஜோடி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் 3 மூதாட்டிகளை ஏமாற்றி கடத்திச்சென்று மயக்க மருந்து கொடுத்து அவர்களிடம் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மூதாட்டிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கள்ளக்காதல் ஜோடி திருச்சி மாவட்டத்தில் பல மூதாட்டிகளை கடத்திச்சென்று நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிசார் சுமதியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கள்ளக்காதலன் கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.