சென்னையில் ஒத்திக்கு வீடு தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.2.80 லட்சம் மோசடி - பெண் கைது

வீட்டை ஒத்திக்கு விடுவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.2.80 மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஒத்திக்கு வீடு தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.2.80 லட்சம் மோசடி - பெண் கைது
Published on: 

சென்னை,

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விவேக் என்பவர் ஒத்திக்கு வீடு தேடி வந்துள்ளார். அப்போது பெரவள்ளூர் பகுதியில் ஒரு வீடு இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு விவேக் பேசினார்.

மோசடி

தொடர்ந்து, வீட்டை ஒத்திக்கு தருவதாக கூறி விவேக்கிடம் வீட்டின் உரிமையாளர் ரூ.6.80 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால் அதே வீட்டை வீட்டின் உரிமையாளர் வேறொரு நபருக்கு அதிக தொகைக்கு ஒத்திக்கு விட்டுள்ளார்.

கைது

இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் விவேக் கேட்டபோது, வாங்கிய தொகையில் 4 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்ததாகவும், மீதமுள்ள தொகையை திருப்பித் தராமல் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, விவேக் அளித்த புகாரின் பேரில் நிர்மலா என்ற பெண்ணை கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது கணவரைத் தேடி வருகின்றனர்.

X