வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது

வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது
வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது
Published on

கோவை

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி பன்சி மேரி லெப்சா (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் ராமநாதபுரம் மருதூரை சேர்ந்த கவிதா (45) என்பவர் கடந்த 7 மாதங்களாக வீட்டு வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் பன்சி மேரி லெப்சா வேலை நிமித்தமாக விழுப்புரம் சென்றார்.

பின்னர் கடந்த 16-ந் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.84 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் வீட்டு வேலைக்கு வந்த கவிதாவும் வேலைக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பன்சி மேரி லெப்சா அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் நகை மற்றும் பணத்தை கவிதா திருடியது தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com