பெண் விஷம் தின்று தற்கொலை

பெண் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
பெண் விஷம் தின்று தற்கொலை
Published on

சமயபுரம், ஜூலை.26-

சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் மஞ்சுளாதேவி (வயது 24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் மஞ்சுளாதேவிக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதற்காக கிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காலில் தொடர்ந்து வலி இருந்து வந்தது. இதனால் அவதி அடைந்த அவர் எலி மருந்து தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com