விஷம் குடித்து பெண் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி சாந்தி (வயது 55). இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். சாந்தி, மகன் சுரேஷ்குமாருடன் வசித்து வந்தார். சாந்தி வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சாந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சாந்தி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகன் சுரேஷ் குமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com