கல்வராயன்மலையில்விஷம் குடித்து பெண் தற்கொலை

கல்வராயன்மலையில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டா.
கல்வராயன்மலையில்விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன் மலையில் உள்ள நொச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி புனிதா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், புனிதாவுக்கும், அவரது மாமனார் குள்ளன் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்ட புனிதா, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதையடுத்து அவரை மீட்டு கரியாலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர்,மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா இறந்துவிட்டார். இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com