பெண் விஷம் குடித்து தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

சங்கரன்கோவில்: 

சங்கரன்கோவில் அருகே உள்ள பி.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் கந்தவேல் மனைவி முருகேஸ்வரி (வயது 58). இவருக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா பிரச்சினை இருந்து வந்தது. அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த முருகேஸ்வரி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com