தடிக்காரன்கோணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

தடிக்காரன்கோணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தடிக்காரன்கோணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

அழகியபாண்டியபுரம்:

தடிக்காரன்கோணம் அருகே புதுக்கிராமத்தை சேர்ந்தவர் மரிய வில்சன். இவருடைய மனைவி சோபா (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று சோபா வீட்டில் விஷம் குடித்த நிலையில் வாந்தி எடுத்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடன் தொல்லையால் சோபா இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---

X

Daily Thanthi
www.dailythanthi.com