எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை
Published on

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 34).

இவர் கணவருடன் வாழாமல் சந்தோஷ் (5) என்ற மகனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் லட்சுமி அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டதாகவும், இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com