படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி பூமா (வயது 40), நேற்று முன்தினம் பூமா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com