தூத்துக்குடியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


தூத்துக்குடியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

தூத்துக்குடியில் பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, செல்சினி காலனி 5வது தெருவைச் சேர்ந்த செந்தில், பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 37). இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகாலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் மகாலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு விருப்பம் இல்லாததால் மகாலட்சுமி தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story