பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்
பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

கோபாலசமுத்திரம்:

நெல்லை அருகே கோபாலசமுத்திரம் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி உமா (வயது 55). இவர்களுக்கு குழந்தை இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட உமா கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் பின்புறம் சென்ற உமா தனது உடம்பில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com