கேகே நகரில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் கருகி படுகாயம்

அக்ஷயா வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
கேகே நகரில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் கருகி படுகாயம்
Published on

சென்னை,

கே.கே நகர், திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் முட்டை வியாபாரி இவரது மனைவி மேனகா இவர்களது மகள் அக்ஷயா.

அக்ஷயா வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் கடந்த 6மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மேனகா தனது காதலனை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அக்ஷயா நேற்று மாலை தாய் மேனாகாவை பார்க்க கே.கே நகர் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த கார்த்திகேயன் மேனகாவை கண்டித்தார் இதனால் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த மேனகா சமையலறைக்குள் சென்று மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு திடீரென தீ வைத்து கொண்டார்.

மேனகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கார்த்திகேயன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார் இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2பேரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com