விழுப்புரம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

விழுப்புரம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டா.
விழுப்புரம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

விழுப்புரத்தை அடுத்த கெடார் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் மனைவி ஷீலா (வயது 43). கடந்த 2 ஆண்டுகளாக ஷீலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 4 மாதங்களாக அவர் சிகிச்சை எடுக்காமல் இருந்த நிலையில் அவரது கணவர் தாமோதரன், ஷீலாவை விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை டெலிகாம் நகர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றார். இந்நிலையில் வீட்டு மாடிக்கு சென்ற ஷீலா, மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த ஷீலாவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com