கழுத்தை அறுத்து பெண் தற்கொலை.. வெளியான அதிர்ச்சி காரணம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபரீத முடிவால் அந்த பெண் அலறி துடித்தார்.
கழுத்தை அறுத்து பெண் தற்கொலை.. வெளியான அதிர்ச்சி காரணம்
Published on

சுசீந்திரம்,

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு சிவாநகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மகள் காவியா (வயது 24). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

டைல்ஸ் அறுக்க பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் எந்திரத்தை பால்பாண்டி வீட்டில் வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மன வருத்தத்தில் இருந்த காவியா, அந்த எந்திரத்தை இயக்கியபடி திடீரென தன்னுடைய கழுத்தில் வைத்தார். இதில் அந்த எந்திரம் கழுத்தை அறுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபரீத முடிவால் காவியா அலறி துடித்தார். ரத்தம் பீறிட்டு பாய்ந்ததால், வீடு முழுவதும் ரத்தம் சிதறியது.

இதற்கிடையே காவியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பின்னர் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தியதில், தீராத தலைவலியால் காவியா இந்த விபரீத தற்கொலையை தேடிக்கொண்டதாக தெரியவருகிறது.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாமா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்திரத்தால் கழுத்தை அறுத்துக் கொண்டு பட்டதாரி பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com