தீக்குளித்து பெண் தற்கொலை

சேத்துப்பட்டு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு தாலுகா நல்லடிசேனை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி குப்பம்மாள். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com