பெண் கவுன்சிலர், கணவருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை அருகே பெண் கவுன்சிலர், அவரது கணவரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
பெண் கவுன்சிலர், கணவருக்கு அரிவாள் வெட்டு
Published on

அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா விசலூர் விசலிக்களம் பகுதியை சேர்ந்தவர் காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் ஜெயம் (வயது 50). இவரது கணவர் தங்கவேல். இவர்கள் இருவரும் இன்று கைவேலிப்பட்டியில் உள்ள உறவினர் நாகராஜ் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கைவேலிப்பட்டியை சேர்ந்த விவசாயி சுந்தரம் (50) என்பவர் வழிமறித்து இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ஜெயத்தின் கையிலும், தங்கவேலுக்கு தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

விவசாயி கைது

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுந்தரம் ஒருவர் நிலத்தில் உழவு செய்து வந்துள்ளார். அந்த நிலத்தை ஒன்றிய கவுன்சிலர் ஜெயம் மற்றும் தங்கவேல் ஆகிய இருவரும் முறைப்படி கைவேலிப்பட்டியை சேர்ந்த நாகராஜிக்கு வாங்கிக்கொடுத்துள்ளனர். இந்தநிலையில், தான் உழவு பார்த்த இடத்தை கணவன்-மனைவி இருவரும் வேறு ஒருவருக்கு வாங்கி கொடுத்த ஆத்திரத்தில் அவர்களை அரிவாளால் வெட்டியதாக சுந்தரம் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com