புதுச்சத்திரம் அருகே கிணற்றில் பெண் பிணம் மீட்பு போலீசார் விசாரணை

புதுச்சத்திரம் அருகே கிணற்றில் பெண் பிணம் மீட்பு போலீசார் விசாரணை
புதுச்சத்திரம் அருகே கிணற்றில் பெண் பிணம் மீட்பு போலீசார் விசாரணை
Published on

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). இவருடைய மனைவி கற்பகம் (58). இவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் கற்பகத்தின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற ராசிபுரம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து கற்பகத்தின் உடலை மீட்டனர். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கற்பகம் வலிப்பு நோயால் சிரமப்பட்டு வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டதில் வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com