கணவர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையம் முன் பெண் தர்ணா

கணவர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையம் முன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
கணவர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையம் முன் பெண் தர்ணா
Published on

முசிறி:

முசிறி அருகே உள்ள தும்பலம் பெருமாள் பாளையத்தை சேர்ந்தவர் கலையரசி (வயது 23). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜசேகரன்(29) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகர், கலையரசிக்கு தெரியாமல் 3 மாதத்திற்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது பற்றி அறிந்த கலையரசி, ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முசிறி அனைத்து மகளிர் பாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது, புகாரை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்னை அலட்சியப்படுத்தும் போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு கலையரசி அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லதா, கலையரசியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதாக கூறினார். இதையடுத்து கலையரசி தர்ணாவை கைவிட்டார். இதையடுத்து அவரது கணவர் மீது போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com