வாகனம் மோதி பெண் பலி

வாகனம் மோதி பெண் பலியானார்.
வாகனம் மோதி பெண் பலி
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர்- மோகனூர் குப்புச்சிபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வேகமாக சென்ற வாகனம் அந்த பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அப்பெண்ணை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்த பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்னின் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த பெண் யார்? எந்த ஊர்? எதற்காக அப்பகுதிக்கு வந்தார் என்பது குறித்து வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com