பஸ் மோதி பெண் பலி

பஸ் மோதி பெண் பலி

சங்கரன்கோவில் அருகே பஸ் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகள் பார்வதி (வயது 45). இவர் நேற்று மாலை மீனாட்சிபுரத்தில் கடைக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவிலில் இருந்து வாசுதேவநல்லூர் நோக்கி சென்ற அரசு பஸ் பார்வதி மீது மோதியது. இதில் பார்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com