அரசு பஸ் மோதி பெண் பலி

சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி
அரசு பஸ் மோதி பெண் பலி
Published on

மேலகிருஷ்ணன்புதூர், 

திங்கள்சந்தை அருகே உள்ள ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் வினோ. இவரது மனைவி மேரி டார்வின் (வயது36). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ராஜாவூருக்கு புறப்பட்டனர். சுசீந்திரம் அருகே உள்ள ஆசிரமம் சாலையில் சன்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி டார்வின் பரிதாபமாக இறந்தார். வினோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com