பஸ் மோதி பெண் பலி

வாணாபுரம் அருகே பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
பஸ் மோதி பெண் பலி
Published on

வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள நாச்சானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 80) இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com