மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி பெண் இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
Published on

விராலிமலை தாலுகா பகவான் பெட்டியை சேர்ந்தவர் குழந்தை மனைவி அழகம்மாள் (வயது 55). இவர், நேற்று பகவான்பட்டி அருகே புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அழகம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com