ரெயிலில் அடிபட்டு பெண் பலி

நெல்லையில் ரெயிலில் அடிபட்டு பெண் பலியானார்.
ரெயிலில் அடிபட்டு பெண் பலி
Published on

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் குறிச்சி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண், அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியானார். அவரது கையில் பார்வதி என்றும் தேள் உருவ பச்சை குத்தப்பட்டிருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com