ரெயில் மோதி பெண் பலி

ரெயில் மோதி பெண் பலியானார்.
ரெயில் மோதி பெண் பலி
Published on

திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து பூங்குடிக்கு இடையே செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாள பகுதியை கடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com