தக்கலை அருகேவாகனம் மோதி பெண் சாவு

தக்கலை அருகேவாகனம் மோதி பெண்உயிரிழந்தார்.
தக்கலை அருகேவாகனம் மோதி பெண் சாவு
Published on

தக்கலை:

தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை பார்த்தசாரதி கோவில் முன்புறம் சாலயோரம் நேற்று முன்தினம் நள்ளிரவு 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பெண் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சாலையோரம் சுற்றி வந்தது தெரிய வந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com