வல்லத்தில்வாகனம் மோதி பெண் சாவு

வல்லத்தில் வாகனம் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
வல்லத்தில்வாகனம் மோதி பெண் சாவு
Published on

வல்லம், 

செஞ்சி அடுத்த வல்லம் அருகே உள்ள மேல் சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி ஜோதி (வயது 44). இவர், புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜோதி கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்சித்தாமூரில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு அவர் வல்லம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜோதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com