தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த, லேசான மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் பெண் ஒருவர், தாளமுத்துநகர் மொட்டைகோபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 44). லேசான மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் இவர், நேற்று மதியம் தாளமுத்துநகர் மொட்டைகோபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அவர் கடலில் இறங்கி குளிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே அவர் நீரில் மூழ்கினார்.

தகவலறிந்த மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடலுக்குப் பிறகு கற்பகம் பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com