மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்து போனார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
Published on

தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் யோனஸ். இவருடைய மனைவி சகாயதன்யா (வயது 22). நேற்று முன்தினம் கணவன், மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குரூஸ்புரம் பஜாருக்கு சென்று உள்ளனர். மோட்டார் சைக்கிளை யோனஸ் ஓட்டி சென்றாராம். குரூஸ்புரம் ரவுண்டானா அருகே வந்த போது, அங்கு இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கி உள்ளது. அப்போது சகாய தன்யா நிலை தடுமாறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com