நகை அடகு வைத்ததை கண்டித்த கணவர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

குடும்ப தேவைக்காக இளம்பெண் 5 பவுன் தாலிச் சங்கிலியை அடகு வைத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

தூத்துக்குடி,

நகை அடகு வைத்ததை கணவர் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நகை அடகு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (33 வயது). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்ப தேவைக்காக 5 பவுன் தாலிச் சங்கிலியை அடகு வைத்துள்ளார்.

தகராறு

இதை முத்துராஜ் கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி மீண்டும் நகையை அடகு வைத்த விவகாரத்தில் கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அனிதா தனது மகனுடன் புதியம்புத்தூர் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள அக்கா காளீஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

விஷம் குடித்தார்

அங்கு வைத்து அனிதா பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் இதுகுறித்து அக்காவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அனிதா நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X