விடுமுறையில் வெளியே அழைத்துச் செல்ல மறுத்த கணவர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

நண்பருடன் வெளியே செல்லவிருப்பதாகக் கூறி மனைவியுடன் வெளியே செல்ல மறுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

செங்கல்பட்டு,

கணவர் வெளியே அழைத்துச் செல்ல மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகராறு

குரோம்பேட்டை அடுத்த நெமிலிச்சேரி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (28 வயது). பல்லாவரத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும், அருணா (26 வயது) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஆயுத பூஜை விடுமுறையொட்டி தன்னை வெளியே அழைத்துச் செல்லுமாறு அருணா தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், ஜெகதீசன் தன்னுடைய நண்பருடன் வெளியே செல்லவிருப்பதாகக் கூறிவிட்டுச் மனைவியுடன் வெளியே செல்ல மறுத்துள்ளார்.

தற்கொலை

இதனால் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜெகதீசன் தனது நண்பருடன் வெளியில் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய ஜெகதீசன், தன் மனைவி அருணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிட்லப்பாக்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அருணாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், இச்சம்பவம் குறித்து மேல் விசாரணைக்காக தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com