மின்சாரம் பாய்ந்து பெண் சாவு

நத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
Published on

நத்தம் அருகே உள்ள புன்னப்பட்டியை சேர்ந்தவர் முத்து. அவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 28). நேற்று முன்தினம் இரவு இவர், கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது கிரைண்டரில் இருந்து எதிர்பாராத விதமாக மகாலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com