

திருவாரூர்,
புல் அறுக்க சென்றபோது விஷவண்டு கடித்து பெண் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50 வயது). கருப்பையன் இறந்து விட்டதால் ராஜேஸ்வரி மதுக்கூர் ராமாம்பாள்புரம் பகுதியில் உள்ள தன் கணவரின் தம்பி பெரமையன் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி புல் அறுக்க அருகே உள்ள ஒரு பகுதிக்கு சென்றார். புல் அறுத்துக் கொண்டிருந்தபோது ராஜேஸ்வரியை விஷ வண்டு கடித்தது. இதனால் மயக்கமடைந்த அவர் கீழே சாய்ந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.