விழுப்புரத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு

விழுப்புரத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் உயிழந்தா.
விழுப்புரத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
Published on

விழுப்புரம் அருகே உள்ள மேல்காரணை பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி பத்மாவதி (வயது 40). இவர்கள் இருவரும் நேற்று மாலை மேல்காரணை பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் வரும்போது பத்மாவதி, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பின்னால் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சிற்குள் பத்மாவதி சிக்கினார். இதில் அவர் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறியதில் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து கணவர் வெற்றிவேல் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது.

இந்த விபத்து குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com