விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயரிழந்தா.
விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு
Published on

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு ராஜேந்திரன். இவரது மனைவி சரோஜா(வயது 53). இவர் நேற்று காலை, வீட்டில் இருந்த துணிகளை காய வைப்பதற்காக மாடிக்கு சென்றார்.

அப்போது, படிக்கட்டில் இருந்த மின்வயர் மீது, அவரது கால் பட்டது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்த அவர், மயங்கி கீழே விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார், இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com