மின்சாரம் தாக்கி பெண் பலி: உறவினர்கள் சாலை மறியல்

குடிநீர் வால்வை திறந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சுபா அலறியபடி கீழே விழுந்தார்.
பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்
Published on: 

திருவண்ணாமலை,

மின்சாரம் தாக்கி பெண் பலியானதை தொடர்ந்து அதிகாரிகள் யாரும் வராததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா சேத்துப்பட்டு பகுதியில் உள்ள வடமாதிமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் கணேசன். டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுபா (வயது 30). நேற்று காலை 6 மணி அளவில் சுபா வீட்டின் அருகே உள்ள வடமாதிமங்கலம் ஊராட்சி பொது மக்களுக்காக குடிநீர் வழங்க குடிநீர் தொட்டியில் உள்ள வால்வை திறக்க சென்றார்.

அப்போது வடமாதிமங்கலம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற மின் ஒயர் ஒரு வாரமாக பெய்த மழை, காற்றில் அறுந்து விழுந்து இருந்தது. குடிநீர் வால்வை திறந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சுபா அலறியபடி விழுந்தார். சத்தம் கேட்டு அங்கு சென்ற அவரது கணவர் கணேசன் சுபாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து சுபா வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் அறிந்த வடமாதிமங்கலம் ஊர் பொதுமக்கள், அதிகாரிகள் யாரும் வராததால் ஆரணி - போளூர் சாலையில் வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் சண்முகம். போளூர் தாசில்தார் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக தாசில்தார் உறுதி அளித்தார். பொதுமக்கள் கலைந்து செல்லாததால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சாலை மறியல் காரணமாக நேற்று பவுர்ணமி கிரிவலத்திற்காக திருவண் ணாமலைக்கு சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com