பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலியானார்.
பாம்பு கடித்து பெண் பலி
Published on

திருவெறும்பூர்,செப்.4-

தஞ்சை கீழப்பட்டி புன்னை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரையன். இவரது மனைவி சுசிலா (வயது 52). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள தேவராய நேரியை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது வீட்டுக்கு வந்து இருந்தார். நேற்று காலை சுசிலா அர்ஜுனன் நெல் நடவு செய்துள்ள வயலில் களை பறிக்க சென்றார். அப்போது, வயலில் இருந்த கட்டு விரியன் பாம்பு சுசிலாவை கடித்தது. இதனையடுத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த மற்றவர்கள் சுசிலாவை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்ச பலன் இன்றி இறந்தார். இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com