பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலியானார்.
பாம்பு கடித்து பெண் பலி
Published on

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த நாயகணைப்பிரியாள் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி சுலோச்சனா (வயது 35). இவர் கடந்த 20-ந் தேதி நாயகணைப்பிரியாள் கிராமத்தில் உள்ள முருகானந்தம் என்பவரது நிலக்கடலை வயலில் கடலைச் செடி பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கடலை செடிகளுக்கு இடையே இருந்த பாம்பு அவரை கடித்து விட்டது. இதில் மயங்கி விழுந்த சுலோச்சனாவை சக தொழிலாளர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுலோச்சனா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com