சென்னை: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் திடீர் உயிரிழப்பு

தலைவலிக்காக இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
சென்னை: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் திடீர் உயிரிழப்பு
Published on

சென்னை,

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி பவானி (வயது 25) இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று பவானி உடல் நலக்குறைவு காரணமாக தளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். அங்கு டாக்டர்கள் பவானிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மயக்கம் அடைந்த பவானியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில் அவர் திடீரென உயிரிழந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து பவானியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரியில் பவானிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பதாகவும் டாக்டர்களின் கவனக்குறைவால் பவானியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி சாட்டி ஆஸ்பத்திரி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இளம்பெண் பவானி தலைவலிக்கு சிகிச்சை பெற சென்ற நிலையில்தான் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி தகவல் கிடைத்ததும் சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். பிரேத பரிசோதனைக்காக பவானியின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் தான் பவானி உயிரிழந்தது எப்படி ? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர் தலைவலிக்காக சிகிச்சை பெற சென்ற நிலையில் பவானிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்து இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இளம்பெண் பவானி உயிரிழந்த நிலையில் அவர் கணவர் மற்றும் குழந்தையோடு எடுத்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடி யோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இந்த பெண்ணா? உயிரிழந்துவிட்டது? என்று கூறி அனுதாபத்தை தெரிவித்து வருகிறார்கள். பவானி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 11 மாத ஆண் குழந்தை பரிதாபமாக தவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com