குளத்தில் மூழ்கி பெண் சாவு

குளத்தில் மூழ்கி பெண் சாவு
குளத்தில் மூழ்கி பெண் சாவு
Published on

திங்கள்சந்தை:

இரணியல் அருகே உள்ள ஆளூர் ஸ்ரீகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவருடைய மனைவி பிரியா என்ற ராமலெட்சுமி (44). ராமலெட்சுமிக்கு வலிப்புநோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் ராமலெட்சுமி அந்த பகுதியில் உள்ள நெடுங்குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதால் ராமலெட்சுமி தண்ணீரில் மூழ்கினார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராமலெட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது கணவர் சசிகுமார் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com