காயப்போட்ட துணியை எடுத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி - காப்பாற்ற சென்ற கொழுந்தனும் உயிரிழப்பு

மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் வெளியே கம்பியில் காயப்போட்டிருந்த துணியை பெண் எடுத்துள்ளார்.
காயப்போட்ட துணியை எடுத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி - காப்பாற்ற சென்ற கொழுந்தனும் உயிரிழப்பு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு, கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ (49 வயது). இவரது மனைவி செல்வி (44 வயது). இவர் நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் வெளியே கம்பியில் காயப்போட்டிருந்த துணியை எடுக்கச் சென்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற மின் ஒயரில் இருந்து கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதை கவனிக்காமல் துணியை எடுத்த செல்வி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த அவரது கொழுந்தன் கணேசன் (48 வயது), செல்வியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com