கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் இறந்தார்.
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் சூரியகனி (வயது 60). இவரது கணவர் அண்ணாமலைசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தனியாக வசித்து வந்த சூரியகனி நேற்று மாலையில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் அருகில் நடந்து சென்றபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். தகவல் அறிந்ததும் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வம், போக்குவரத்து அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், வீரர்கள் வந்து சூரியகனி உடலை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com