தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொல்லப்பட்ட சம்பவம்: தங்கை மகன் அதிரடி கைது

குற்றவாளிகளுக்கு, இதற்கு முன்பு எந்த வழக்கும் கிடையாது. சொந்த பகை காரணமாகவே நடந்து உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொல்லப்பட்ட சம்பவம்:  தங்கை மகன் அதிரடி கைது
Published on: 

தனியாக இருந்த பெண்

தூத்துக்குடி கந்தன்காலனி 3-வது தெரு மேற்கு பகு தியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவருடைய மனைவி சசிகலா (வயது 47). இவர்களுக்கு நிரஞ் சன்குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சித்திரைவேல் கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நிரஞ்சன்குமாருக்கு திருமணமாகி சங்கர் காலனியில் தனியாக வசித்து வருகிறார். மகள் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டின் மாடியில் சசிகலா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

நகை பறிக்க முயற்சி

இதனை நோட்டமிட்ட மர்மநபர், நேற்று மதியம் ஆள்நடமாட்டம் இல்லாத போது நைசாக சசிகலா வீட்டிற்குள் புகுந்தார்.உடனடியாக அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மர்மநபர் பறிக்க முயன்றார். ஆனால் சசிகலா தனது நகையை இறுக்க பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சசிகலாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மர்மநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

சசிகலாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது மகன் நிரஞ்சன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து தனது தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விரைந்தனர்

தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு குருவெங்கட்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்காதர் (தென்பாகம்), தனசேகரன் (சிப்காட்), திருமுருகன் (முத்தை யாபுரம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் 'தாமிர்' வரவழைக்கப்பட் டது. ஆனால், அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

தங்கை மகன் கைது

இதுதவிர அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சசிகலாவின் தங்கை மகன் விக்னேஷ் என்ற முனீஷ் (27) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தென்பாகம் போலீ சார் வழக்குப்பதிந்து, தப்பி ஓடிய முனீசை பிடித்து கைது செய்தனர்.

சூப்பிரண்டு பேட்டி

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:- வீட்டில் தனியாக இருந்த சசிகலா மதியம் 2.30 மணி அளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசார ணையில், சசிகலாவின் தங்கை மகன் விக்னேஷ் என்ற முனீஷ் என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.முனீசை கைது செய்து, அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் செல்போன் பறி முதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. கொலை நடந்த 3 மணி நேரத்தில் அதாவது மாலை 5.30 மணியளவில் குற்றவாளி கைது செய் யப்பட்டு உள்ளார்.மாவட்டத்தில் இது தொடர்ச்சியாக நடந்த 8-வது கொலை ஆகும். ஆனால், எந்த கொலையிலும் குற்றவாளிகளுக்கு, இதற்கு முன்பு எந்த வழக்கும் கிடையாது. சொந்த பகை காரணமாகவே நடந்து உள்ளது. தொடர் கொலைகளை தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com