ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் எட்டிதுறை பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி ஷாலினி (வயது 19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து உறவினர்கள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை தொடர்ந்து ஆம்புலன்ஸ் அசோக் வீட்டிற்கு வந்து, அவரது மனைவியை அழைத்துக் கெண்டு பொள்ளாச்சி நோக்கி வந்தது. ஆம்புலன்சை டிரைவர் குபேர் ஓட்டி வந்தார். அப்போது வரும் வழியில் திடீரென்று பிரசவ வலி அதிகமானதால் மருத்துவ உதவியாளர் வினோதினி ஆம்புலன்சிலேயே ஷாலினிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தாயையும், சேயையும் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com