காதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது

விலகி சென்ற காதலி குறித்து அவருடைய தோழியிடம் செல்போனில் தகவல் கேட்டு தொல்லை கொடுத்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது
Published on

சென்னை கொளத்தூர், பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (வயது 25). இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதற்கிடையில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அந்த பெண், சஞ்சய் குமாருடன் பழகுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சஞ்சய்குமார், தனது காதலியின் தோழியான அண்ணா நகரை சேர்ந்த அபி என்ற அபிநயா(21)விடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு, தனது காதலி குறித்து தகவல் கேட்டு தால்லை கொடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அபிநயா, தன்னுடைய கணவர் மோசஸ் (23), அவருடைய நண்பர் சாமுவேல் (19) ஆகியோருடன் சேர்ந்து அண்ணா நகர், நியூ ஆவடி ரோடு அருகே நடந்து சென்ற சஞ்சய்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த சஞ்சய்குமார், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின்பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசஸ், அவருடைய மனைவி அபிநயா, சாமுவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com