மின்சார ரெயில் மோதி பெண் ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு

திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரெயில் மோதி பெண் ஐ.டி. ஊழியர் உயிரிழந்தார்.
மின்சார ரெயில் மோதி பெண் ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு
Published on

சென்னை,

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாம்பாபு. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 25). என்ஜினீயரான இவர் தரமணியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஐஸ்வர்யா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரெயில் மோதி ஐஸ்வர்யா தூக்கி வீசப்பட்டார்.

இதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதைப் பார்த்த ரெயில்வே ஊழியர் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com