சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்

குத்தாலம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து பெண் காயம் அடைந்தார்.
சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்
Published on

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆணைமேலகரம் ஊராட்சி மல்லியம் இந்திரா நகரில் அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. அவ்வப்போது வீடுகளின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இந்த தொகுப்பு வீட்டில் மாதவன் எனபவர் மனைவி அனிதா (வயது 30), மகள்கள் மாதஸ்ரீ (9), லட்சிதா (5) மற்றும் உறவினர் அகிலாண்டம் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வம் வேலைக்கு சென்றிருந்த நிலையில் மனைவி அனிதா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். இவர்கள் நேற்று அதிகாலை வீட்க்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது. இதில் அனிதா காயம் அடைந்தார். உடனடியாக அ மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது மகள் மாதஸ்ரீக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த தொகுப்பு வீடுகள் சேதமடைந்து வசிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். அல்லது சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேணடும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com