மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம்

போடியில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம்
Published on

போடி குலாலர்பாளையம் போஜராஜ் தெருவை சேர்ந்தவர் இந்திராணி (வயது 58). நேற்று இவர், போடியில் உள்ள வார சந்தையில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com